தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மீனாட்சி கோயில் சார்பில் தங்கும் விடுதி திறப்பு

 மீனாட்சி கோயில் சார்பில் தங்கும் விடுதி திறப்பு

 மீனாட்சி கோயில் சார்பில் தங்கும் விடுதி திறப்பு


ADDED : பிப் 27, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் எல்லீஸ்நகரில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை (யாத்ரி நிவாஸ்) முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, அறங்காவலர்கள் செல்லையா, சீனிவாசன், மீனா, சுப்புலட்சுமி, இணை கமிஷனர்கள் சுரேஷ், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தரைத்தளம், இருதளங்களுடன் உள்ள இவ்விடுதியில் 20, 10 படுக்கைகள் கொண்ட 16 பெரிய அறைகள் உள்ளன. 8 முதல் 4 படுக்கைகள் கொண்ட குடும்பத்தினர் தங்கும் டீலக்ஸ் அறைகள், 3 அறைகள் கொண்ட சாதாரண அறைகள், விருந்தினர் அறை என மொத்தம் 28 அறைகள் உள்ளன. ஒரே நேரத் தில் 278 பேர் தங்க முடியும்.

வாடகையாக திங்கள் முதல் வெள்ளி வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1500 வரை ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் முக்கிய திருவிழா நாட்கள், சீசன் நாட்களில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us