/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு: மீண்டும் தலைவராக அமைச்சரின் தாய் தேர்வு

ADDED : ஜன 15, 2026 07:27 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவி காலாவதியாகி ஒரு மாதம் ஆன நிலையில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இக்கோவில் அறங்காவலர்களாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் தியாகராஜனின் தாய் ருக்மணி, தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, வழக்கறிஞர் அன்புநிதியின் மனைவி மீனா, டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் தலைவராக ருக்மணி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிர்வாக ரீதியாக அனுமதி பெற அறங்காவலர்கள் ஒப்புதல் அவசியம். ஆனால், அவர்களின் பதவிகாலம் கடந்த நவ.,30ல் முடிந்தது.
பதவி நீட்டிப்பு வழங்கப்படாததாலும், புதியவர்கள் நியமிக்கப்படாததாலும் திருப்பணிகள் பாதிக்கும் நிலை உருவானது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, அறங்காவலர்களாக இருந்தவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி, டிச., 30ல் அரசு உத்தரவிட்டது.
இன்று தை மாதம் பிறக்கும் நிலையில், அடுத்தடுத்து கரிநாள் வருவதால், போகி பண்டிகையான நேற்று காலை 6:30 மணிக்கு அனைவரும் பொறுப்பேற்று கொண்டனர். ருக்மணியே மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.