/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்வாரிய கணக்கு அலுவலர்கள் கூட்டம்
/
மின்வாரிய கணக்கு அலுவலர்கள் கூட்டம்
ADDED : அக் 01, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மின்வாரிய நிதி மற்றும் கணக்கு அலுவலர்கள் அமைப்பின் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் லெனின் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் கிரிநாதன் முன்னிலை வகித்தார்.
மின்துறையை பொதுத்துறையாக சேவைத் துறை போன்று செயல்பட மத்திய, மாநில அரசுகள் கொள்கை மாற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியம், ஓய்வுகால பணப்பயன்களுக்கான அரசாணைப்படி தனிநிதியம் ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பம், நிர்வாக பணிகளில் கணக்கு பிரிவு பணியாளர்கள், அலுவலர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும், வட்ட டி.எப்.சி.,க்களுக்கு ஆய்வுக்கு செல்ல வாகன வசதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.