/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கண்துடைப்பாக நடக்குது கூட்டங்கள்' குன்றத்து விவசாயிகள் குமுறல்
/
'கண்துடைப்பாக நடக்குது கூட்டங்கள்' குன்றத்து விவசாயிகள் குமுறல்
'கண்துடைப்பாக நடக்குது கூட்டங்கள்' குன்றத்து விவசாயிகள் குமுறல்
'கண்துடைப்பாக நடக்குது கூட்டங்கள்' குன்றத்து விவசாயிகள் குமுறல்
ADDED : ஜன 24, 2025 04:46 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணைத் தாசில்தார் சுபேதா தலைமையில் நடந்தது.
விவசாயிகள் மாரிச்சாமி, சிவராமன், பாண்டியன், லட்சுமணன், ஜெயக்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகள் பேசியதாவது: இதுவரை கொடுத்த மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெறும் கண் துடைப்பு கூட்டங்களாகவே நடக்கிறது. மாதந்தோறும் குறைகள் அடங்கிய மனுக்களை கொடுக்கிறோம். அதற்கான தீர்வு என்ன என்று தெரிவதில்லை.
ஒவ்வொரு மாதமும் 2 வது செவ்வாய்க் கிழமை நடக்க வேண்டிய கூட்டம் சமீபகாலமாக மற்ற நாட்களில் நடத்தப்படுகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை. பெரும்பாலான கூட்டங்களில் தாசில்தார் கலந்து கொள்வதில்லை. கூட்டத்தில் சில துறை அதிகாரிகளே பங்கேற்கின்றனர்.
நீர் வரத்துக் கால்வாய்கள், கண்மாய் ஆக்கிரமிப்புகள் குறித்த எதற்கும் நடவடிக்கை இல்லை. பிரச்னைகள் அதிகம் உள்ள துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் வருவதில்லை. எதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை எனக்கூறி விவசாயிகள் புறப்பட்டனர்.

