sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மேலுார் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி விளைச்சலும், விலையும் அதிகரித்ததால்

/

 மேலுார் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி விளைச்சலும், விலையும் அதிகரித்ததால்

 மேலுார் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி விளைச்சலும், விலையும் அதிகரித்ததால்

 மேலுார் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி விளைச்சலும், விலையும் அதிகரித்ததால்


ADDED : ஜன 09, 2026 06:22 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வாங்க வெளி மாநில வியாபாரிகள் மேலுார் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்தாண்டு விளைச்சலும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலுார் வட்டாரத்தில் பல்லவராயம்பட்டி, எட்டி மங்கலம் சருகுவலையபட்டி உள்பட பல கிராமங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்தாண்டு கரும்பு நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. கரும்பின் வளர்ச்சி மற்றும் நிறத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு கொள்முதலாகும் கரும்புகள் குஜராத், டில்லி, மும்பை உள்பட வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.320 விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 15 கரும்புகள் கொண்டது ஒரு கட்டு. ஒரு மாட்டு வண்டிக்கு 20 கட்டுகள், ஒரு லாரிக்கு 300 கட்டுகள், டாரஸ் லாரிக்கு 450 கட்டுகளை ஏற்றி வெளியூர், பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

பலவராயம்பட்டி விவசாயி பாண்டி கூறியதாவது : மேலுார் பகுதி செம்மண் பூமி என்பதால் கரும்பின் சுவை அதிகம். கரும்பு உற்பத்தி செய்ய டீசல், உரம், ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட 3 மடங்கு செலவு அதிகரித்துள்ளது. நடவு முதல் அறுவடை வரை 10 மாதத்தில் ஏக்கருக்கு ரூ.1.60 லட்சம் செலவாகிறது. தற்போது கூட்டுறவு சங்கத்திற்கு கொள்முதல் செய்வதால் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது. எனவே விவசாயிகளுக்கு நஷ்டமில்லா நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயத்தை அதிகரிக்க அரசு இடு பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us