நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (டி.ஆர்.இ.யூ.,) 2 நாள் மண்டல மாநாடு சென்னையில் நேற்று துவங்கியதை முன்னிட்டு, நினைவு ஜோதிப் பயணம் நேற்று முன்தினம் மதுரையில் துவங்கியது.
ரயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என 1974ல் நடந்த போராட்டத்தில், மதுரையில் தண்டவாளத்தில் தலை வைத்து சி.ஐ.டி.யூ., நிர்வாகி ராமசாமி உயிர்நீத்தார்.
அவரது நினைவு ஜோதியை அப்போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற ஓய்வு பெற்ற லோகோ பிட்டர் அனங்க வீரராமன் வழங்க, டி.ஆர்.இ.யூ., கோட்டப் பொருளாளர் சரவணன் பெற்றார்.
முன்னாள் துணைப் பொதுச் செயலர் திருமலை அய்யப்பன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.