UPDATED : நவ 22, 2026 05:28 PM
ADDED : நவ 22, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ஏ.ஏ.என்.எம்.இ.ஐ., நிறுவனம், ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் சர்வதேச ஆண்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவர் பிரேம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக எஸ்.எம். கார்டன் பாலகுரு, பின்வாலெட் நிறுவனத்தின் நிறுவனர் குப்துபுதீன் அஜ்மல், பேச்சாளர் சிக்கந்தர் சுல்தான் ஆகியோர் பங்கேற்றனர். நிறுவனர் ஏ.எஸ். ஜஸ்டின் அலெக்ஸ் சிறப்புரையாற்றினார். ஆரோக்கியமான ஆண்கள், வலிமையான குடும்பங்கள், சிறந்த சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
