ADDED : டிச 24, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
ஏற்கனவே வெற்றி பெற்ற மண்டலங்களைச் சேர்ந்த அமெரிக்கன் கல்லுாரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி, சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரி அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜி.டி.என். கல்லுாரி 2ம் இடம், அய்யநாடார் கல்லுாரி 3ம் இடம் பெற்றன.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத்தலைவர் பாலகிருஷ்ணன், இயக்குநர் நிர்மல்சிங், பல்கலை உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் பாராட்டினர்.