தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மனவெளிப் பயணம்

 மனவெளிப் பயணம்

 மனவெளிப் பயணம்


ADDED : பிப் 12, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர் : காயத்ரி மஹதி

வெளியீடு : ஹெர் ஸ்டோரிஸ்

81, 4வது நிழற்சாலை

அசோக் நகர், சென்னை -- 600 083

அலைபேசி : 96003 98660

பக்கம் : 190

விலை : ரூ.270

'ம னநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையை திரைப்படங்கள் குழந்தைத்தன்மையுடனோ, கொலைகாரனாகவோ காட்டுகின்றன' என முதல் அத்தியாயத்திலே சொல்லியிருப்பது தெறிக்கும் நிஜம். உளவியல் நுாலில் திரைப்படங்கள், சான்றோர் கருத்துக்கள், கவிதைகளைத் துாவி சுவைபட எழுதலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் நுாலாசிரியர்.

'புத்தகங்களில் படிக்கும் வாழ்வியல் கோட்பாடுகளை எல்லா நேரங்களிலும் வீட்டில் புகுத்த முடியாது; வீடு என்பது சிக்கலான இடமாக தான் இருக்கும்' என்ற உண்மையை உரக்க சொல்லியிருப்பது சிறப்பு. நுாலின் எவ்விடத்திலும் தன் கருத்தை வாசகனுக்கு திணிக்காமல், அறிவுரையையே அறவுரையாக வாசகனின் மனவெளியில் ஆழமாக தோண்டி விதைத்திருக்கிறார் ஆசிரியர். சிதறடிக்கும் மனதை சிறகடிக்க வைக்கிறது காயத்ரி மஹதியின் எழுத்து.

- -ரெங்கா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us