நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் துறை உயராய்வு மையம் சார்பில் நாளை (ஜன.,10) காலை 10:00 மணிக்கு ரோட்டோர உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
அரசிடம் உரிமம் பெற விண்ணப்பித்தல், எந்த அலுவலகத்தில் யாரை தொடர்பு கொள்வது,வங்கிக் கடன் வழிமுறைகள் குறித்து வல்லுனர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.