ADDED : ஆக 25, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மாணவர்கள், பெற்றோர்களுக்கான ‘உச்சம் தொடு’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஷார்ப் தலைவர் காவேரி கனி வரவேற்றார். சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். டென்செமி நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி பேசுகையில், ‘‘உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்தல், உறவுமுறைத் திறன்களை பேணுதல், பொறுப்புணர்வுடன் செயல்படுதல் ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். சேவ்மாம் சி.இ.ஓ., செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.
