ADDED : நவ 26, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சவுந்தர்ராஜன் கூறியதாவது: எங்களது 43வது மாநில மாநாடு, சுதேசி வணிகம் சுயதொழில் காக்கும் பிரகடன மாநாடாக கன்னியாகுமரியில் நடத்த உள்ளோம். மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை மாற்றி அமைத்ததற்கு நன்றி. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இருந்தாலும் சில பொருட்களை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பழைய இரும்புக்கும் 18 சதவீதம், புதிய இரும்புக்கும் 18 சதவீதமாக உள்ளது. ஒரே வரி என்பது ஏற்புடையது அல்ல. வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

