ADDED : ஜன 18, 2024 06:30 AM
மதுரை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் மதுரையில் கொண்டாடப்பட்டது. நகர் அ.தி.மு.க., சார்பில் கே.கே.நகரில் உள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மாலை அணிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பகுதி துணை செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், வடக்கு பகுதி செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ராஜ்மோகன், முனியசாமி, பிரகாஷ், கருப்பையா, அன்பு, பிரபு, மகாலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
உசிலம்பட்டி
நகர் செயலாளர் பூமா ராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், ராஜா, தவசி, ஜெ.,பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர்.
பன்னீர்செல்வம் அணி சார்பில் நகர் செயலாளர் சசிகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள், நிர்வாகிகள் கார்த்திகைச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் ஜான்சன், வேங்கைமார்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.ம.மு.க., நகர் செயலாளர் பிச்சை, ஒன்றியச் செயலாளர்கள் அலெக்ஸ்பாண்டி, முருகன், நிர்வாகிகள் காக்கிராஜா, பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலுார்
அ.வலையபட்டியில் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், நகர் செயலாளர் சரவணக்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
நகரியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், மகேந்திரன், தமிழரசன், சரவணன், கருப்பையா, ஜெ., பேரவை நிர்வாகி வெற்றிவேல், தனராஜன், ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், அன்பழகன், ராமையா, பிச்சை ராஜன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.