தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுண்ணுாட்ட சத்து நெல் பயிருக்கு மிக அவசியம்

நுண்ணுாட்ட சத்து நெல் பயிருக்கு மிக அவசியம்

நுண்ணுாட்ட சத்து நெல் பயிருக்கு மிக அவசியம்


ADDED : நவ 06, 2024 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : ''நெல் வயல்களில் நுண்ணூட்டச் சத்து இடுவது மிகவும் அவசியம்'' என திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மழைநீரை பயன்படுத்தி நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நடவு செய்யும்போது மண்பரிசோதனை செய்து அதில் பரிந்துரைகளின்படி தழை, மணி, சாம்பல் சத்து உரம் மற்றும் நுண்ணுாட்ட உரம் இடுதல் வேண்டும். ஆனால் விவசாயிகள் பெரும்பாலும் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை மட்டுமே இடுகின்றனர். அது தவறு. பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வளவு அவசியமோ அதே போல் நுண்ணுாட்டச் சத்தும் மிக அவசியம்.

நுண்ணுாட்டச்சத்தில் ஏதேனும் ஒன்று பற்றாக்குறையாக இருந்தாலும் பயிர் வளர்ச்சி, மகசூலை வெகுவாக பாதிக்கும். எனவே விவசாயிகள் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுாட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து, கடைசி உழவின்போது வயல் முழுவதும் சீராக தெளிக்க வேண்டும். நெல் நுண்ணுாட்டக்கலவை திருப்பரங்குன்றம் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us