/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொற்றுநோய்க்கான 'மிட்கான்' மாநாடு
/
தொற்றுநோய்க்கான 'மிட்கான்' மாநாடு
ADDED : மார் 08, 2026 04:30 AM
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தொற்றுநோய்கள் தொடர்பான 'மிட்கான் 2026' மாநாடு நடந்தது.
மருத்துவமனையின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக் குழு, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இந்திய மருத்துவச் சங்க மதுரை மீனாட்சி கிளை இணைந்து நடத்தின.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முத்துசித்ரா துவக்கி வைத்தார். மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன், மீனாட்சி கிளை கவுரவ செயலாளர் டாக்டர் கணேஷ் ராஜகோபால் கலந்து கொண்டனர்.
தொற்று நோய்கள் பிரிவின் மருத்துவ நிபுணர் மாலதி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி, சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொற்று நோய் துறைத் தலைவர்கள் அரவிந்த் ரகுகுமார், சுரேஷ்குமார், செந்துார் நம்பி, மதுரை மருத்துவக் கல்லுாரி, சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவன நுண்ணுயிரியல் துறை நிபுணர்கள் வசந்தப்பிரியன், பாக்யா நான்சி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு நிர்வாகிகளான டாக்டர்கள் குமார், மாலதி, அபிநயா ஏற்பாடுகளை செய்தனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த 400 டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

