/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கனிமவளக் கொள்ளை; அ.தி.மு.க., தர்ணா
/
கனிமவளக் கொள்ளை; அ.தி.மு.க., தர்ணா
ADDED : அக் 02, 2025 03:25 AM

பேரையூர் : மதுரை மாவட்டத்தில் நடக்கும் கனிம வளக்கொள்ளையை தடுக்க வேண்டும். காய்ந்து போன மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.
பேரையூர் தாலுகா வையூரில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். உதயகுமார் பேசியதாவது: திருமங்கலம்,சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளில் வேளாண் விளை நிலங்கள் பாதிக்கும் வகையில் கனிம வளம் கொள்ளை நடந்து வருகிறது. இதை சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். உதயநிதி மதுரை வந்தபோது கோரிக்கை விடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. வையூரில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.