தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மார்பக புற்றுநோய் குறித்து மினி மாரத்தான்

 மார்பக புற்றுநோய் குறித்து மினி மாரத்தான்

 மார்பக புற்றுநோய் குறித்து மினி மாரத்தான்


ADDED : டிச 15, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு 'பிங்கத்தான் 2025' மாரத்தான் நடந்தது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில்'பெண்களுக்காக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் நடந்த மாரத்தானை, போலீஸ் துணை கமிஷனர் வனிதா துவங்கி வைத்தார். ஒய்.எம்.சி.ஏ., தலைவர் எலிசபெத், குழந்தைகள் நல சிறப்பு அலுவலர் பிரேமலதா முன்னிலை வகித்தனர். நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கியதற்காக புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர்.

மருத்துவமனைநிர்வாகி டாக்டர் கண்ணன், டாக்டர்கள் விஜயபாஸ்கர்,கிருஷ்ணகுமார் கூறுயதாவது: இந்தியாவில் 2022ல் மட்டும் 14.6 லட்சம் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை 2025ல் 15.7 லட்சமாகவும், 2040-ல் 22.1 லட்சமாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மார்பகத்தில் வலி இல்லாத கட்டி, வாயில் ஆறாத புண்கள் அல்லது பிறப்புறுப்பில் அசாதாரண ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பெண்கள் சீரான இடைவெளியில் மேமோகிராம், கர்ப்பப்பை வாய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றனர். மார்க்கெட்டிங் பொது மேலாளர் சிவக்குமார் உடன் இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us