ADDED : மே 07, 2025 01:57 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள், தொழில்நுட்பங்கள் குறித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று ஆய்வு செய்தார்.
இவ்வகையில் செயல்படும் திட்டங்கள் குறித்த 2 நாள் ஆய்வை அமைச்சர் காந்தி மேற்கொண்டார். முதல்நாள் தேனி மாவட்ட நுாற்பாலையிலும், 2ம் நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் அச்சங்குளம் கூட்டுறவு நுாற்பாலையிலும், மாலையில் மதுரை கோட்ஸ் நிறுவனத்திலும் ஆய்வு செய்தார். நுாற்பாலை செயல்பாடு, மகளிர் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
துணிநுால்துறை இயக்குனர் லலிதா, கூடுதல் இயக்குனர் மகாலிங்கம், மண்டல துணை இயக்குனர் திருவாசகர், மதுரை கோட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
