/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு
/
அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு
ADDED : ஜன 08, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜன.14ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அதற்காக மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் மருத்துவ பரிசோதனை மையம், வாடிவாசல் அமையும் இடங்களில் மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. அவற்றை அமைச்சர் மூர்த்தி நேற்று பார்வையிட்டார்.
பின்பு கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாருடன் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.