/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர் மூர்த்தி துவக்கம்
/
புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர் மூர்த்தி துவக்கம்
புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர் மூர்த்தி துவக்கம்
புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் அமைச்சர் மூர்த்தி துவக்கம்
ADDED : டிச 31, 2024 04:56 AM

மதுரை: மதுரையில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மதுரையில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் சமூக நலத்துறை சார்பில் லேடி டோக் கல்லுாரியில் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், வெங்கடேசன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குனர் ஜெயலட்சுமி, கல்லுாரி கல்விகள் இணை இயக்குனர் குணசேகரன், சமூக நல அலுவலர் திலகவதி, கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ பங்கேற்றனர்.
இத்திட்டம் முதற்கட்டமாக அரசு பள்ளியில் 6முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. இதன் விரிவாக்கமாக நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கும் வழங்கப்பட்டது.
துாத்துக்குடியில் முதல்வர் தொடங்கிய திட்டத்தை காணொளி வாயிலாக பார்வையிட்டனர். இதையடுத்து மதுரையில் 98 கல்லுாரிகளில் படிக்கும் 5,509 மாணவிகளுக்கு திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: கிராமப்புற மாணவிகள், ஏழ்மையில் இருக்கும் மாணவிகள் இத்திட்டத்தால் முன்னேற்றம் அடைந்துள்ளனர். திருமணமான பெண்களில் 40 சதவீதம் பேர் வேலைக்கு செல்கின்றனர்.
கூலி வேலை பார்ப்போரும் தங்கள் பிள்ளைகளை பட்டதாரியாக்க விரும்புகின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அதிகாரிகள் துணை இருந்தால் வேலை கிடைத்துவிடும். இன்று நிலைமை மாறியுள்ளது.
படிப்புக்கும் திறமைக்கும் தான் வேலை. 70 சதவீத பெண்கள் மேல்நிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் கூடுதலாக பயன்பெறுவர். டி.என்.பி.எஸ்.சி., அதற்கு உதாரணம் என்றார்.