ADDED : மார் 10, 2026 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, மார்ச் 10 - மதுரையில் மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மூலம் பொன்னகரம் பிராட்வே, நாடார் சந்து பகுதிகளில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடைகளை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா தலைமை வகித்தார்.
இதன் பின் பொன்னகரம் ஒன்று, 2வது குறுக்குத் தெருக்கள், சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு பகுதிகளில் ரோடு, குடிநீர் தெரு விளக்கு பராமரிப்பு குறித்து அமைச்சர், கமிஷனர் ஆய்வு செய்தனர். மக்களிடம் குறைகள் கேட்டனர். மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர்கள் சரவணன், ஷியாம்சுந்தர், கவுன்சிலர்கள் ஜென்னியம்மாள், விஜயா பங்கேற்றனர்.

