sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு ‛'பச்சோந்தி' ; அ.தி.மு.க.,வால் வைகோவுக்கு பம்பரம் கிடைத்தது; செல்லுார் ராஜூ பதிலடி

/

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு ‛'பச்சோந்தி' ; அ.தி.மு.க.,வால் வைகோவுக்கு பம்பரம் கிடைத்தது; செல்லுார் ராஜூ பதிலடி

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு ‛'பச்சோந்தி' ; அ.தி.மு.க.,வால் வைகோவுக்கு பம்பரம் கிடைத்தது; செல்லுார் ராஜூ பதிலடி

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு ‛'பச்சோந்தி' ; அ.தி.மு.க.,வால் வைகோவுக்கு பம்பரம் கிடைத்தது; செல்லுார் ராஜூ பதிலடி

1


ADDED : பிப் 17, 2026 07:23 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: ''அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி. ஒரு கட்சியில் நிலையாக இருக்கமாட்டார். சேடப்பட்டி முத்தையா காலை பிடித்து அழுது அ.தி.மு.க.,வில் 'சீட்' கேட்டவர்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில்தான் வெட்டு, குத்து எல்லாமே. அதில் 'மெயின்பார்ட்' காங்கிரஸ்தான். காங்கிரசிற்கு அங்கு மரியாதை இல்லை. தி.மு.க., எப்போதுமே கூட்டணி கட்சியினரை மதிக்காது. அதற்கு திருமாவளவனே சான்று.

வைகோ யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார். 'தி.மு.க., வாரிசு அரசியல் ஊழலை கண்டித்து தகுதியற்ற ஸ்டாலினை அடுத்த வாரிசாக கொண்டுவருவதற்கு என்னை கருணாநிதி பழிவாங்குகிறார். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக என்னை காட்டிக்கொடுத்து பழி வாங்க பார்க்கிறார்கள்' என வைகோ புலம்பினார். அவர் 1999ல் எங்களுடன் இருந்தபோதுதான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. எங்களுடன் இருந்ததால் தான் பம்பரம் சின்னம் கிடைத்தது. வைகோ நம்பகத்தன்மையற்ற தலைவர் என்பதால் அவரை அவரது தொண்டர்கள் துாக்கி எறிந்தனர்.

தேர்தலில் 4 'சீட்' கூடுதலாக வாங்க வேண்டும் என்பதற்காக வைகோ இப்படி பேசுகிறார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி. ஒரு கட்சியில் நிலையாக இருக்கமாட்டார். தனிக் கட்சி தொடங்கினார். ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர். சினிமா படங்களை விநியோகம் செய்தவர். அவருக்கு பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு எதிராக கட்சி தொடங்கி, இரட்டைஇலையை முடக்க நினைத்தார். சேடப்பட்டி முத்தையாவிடம் காலை பிடித்து அழுது அ.தி.மு.க.,வில் 'சீட்' கேட்டவர்தான் ராஜகண்ணப்பன். காலை பிடித்தவர் எல்லாம் எங்களை பற்றி பேசக்கூடாது. எப்போதுமே அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றுதான் தி.மு.க.,வினர் நினைப்பார்கள். அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும்தான் போட்டி. மற்றவர்களை(த.வெ.க.,) பற்றி எனக்கு தெரியாது.

தி.மு.க.,வினர் ஜெயலலிதாவை இழிவாக பேசியவர்கள். சட்டசபையில் அவரது சேலையை இழுத்து தாக்குதல் நடத்தி கொல்ல முயன்றனர். அக்கட்சி எப்போதுமே பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தது கிடையாது. உதயநிதியைவிட கனிமொழி அரசியல் தெரிந்தவர்தானே. அவரை ஏன் முன்னிலைப்படுத்துவது இல்லை. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us