/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாய் பராமரிப்பு அமைச்சர் ஆய்வு
/
கால்வாய் பராமரிப்பு அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 29, 2024 05:28 AM
மதுரை: மதுரையில் பருவமழையால் செல்லுார் நரிமேடு, பந்தல்குடி பகுதியில் கால்வாய் நீர் தெருக்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள்சிரமப்பட்டனர். இப்பகுதியில் கால்வாய்களைதுார்வாராததே இப்பாதிப்புக்கு காரணம் என பலரும் புகார் தெரிவித்ததையடுத்து மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிடப்பட்டு மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உட்பட அதிகாரிகளின் தொடர் ஆய்வுப் பணிகளால் பாதிப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டன. இதையடுத்து தினமும் கண்மாய், கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பீபிகுளம் கண்மாய் மறுகால் செல்லும் கால்வாய்களை சுத்தம் செய்து நீர் வெளியேற்றும் பணிகளை இரவிலும் ஆய்வு செய்தனர். ஆத்திகுளம் காந்திபுரம் பகுதியில் மழைநீர் வடிந்த பின்பு நடந்து வரும் சுகாதார பணிகளை பார்வையிட்டனர்.