நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்ரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று மதியம் திண்டுக்கலில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்ற அமைச்சர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளிகள், மகப்பேறு, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
நோயாளிகளிடம் மருத்துவ சேவை மற்றும் குறைகள் குறித்தும், டாக்டர்கள் மற்றும் பணியாளர்களிடம் மருத்துவமனைக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

