/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்களாகும் வாய்ப்பு: இரண்டு சதவீதம் ஒதுக்கீடு
/
அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்களாகும் வாய்ப்பு: இரண்டு சதவீதம் ஒதுக்கீடு
அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்களாகும் வாய்ப்பு: இரண்டு சதவீதம் ஒதுக்கீடு
அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்களாகும் வாய்ப்பு: இரண்டு சதவீதம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 02, 2025 03:28 AM
மதுரை : கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களில் 2 சதவீதம் பேருக்கு பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அளவில் கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல நிலைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் பி.எட்., முதுகலை பட்டம், எம்.பில்., பிஎச்.டி., போன்ற கூடுதல் கல்வித் தகுதிகளை பெற்றுள்ளனர். ஆசிரியர் பதவி உயர்வில் இவர்களுக்கான ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது.
ஆனால் மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கற்பித்தலில் போதிய அனுபவம் இல்லாத பணியாளர் களுக்கு ஆசிரியர் பணி வழங்கலாமா என கருத்து எழுந்ததால் சில ஆண்டுகளாக இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற வழக்கில் அலுவலர்களுக்கு சாதகமாக உத்தரவு கிடைத்ததால் கல்வி பணியாளர்களுக்கு பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையே சி.இ.ஓ.,க்கள் சார்பில் மாவட்டம் வாரியாக பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர் தகுதி பட்டியல் விபரம் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அரியலுார், சென்னை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தேனி, திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மொத்த பட்டதாரி ஆசிரியர்கள் - 513, முதுகலை ஆசிரியர்கள் - 578 என மொத்தம் 1091 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1091 இடங்களில், 2 சதவீதம் இடங்கள் கல்வி பணியாளர்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் துரைப்பாண்டி கூறுகையில், பல ஆண்டுகளாக இதுதொடர்பான காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை (பேக் லாக்) நிரப்ப வேண்டும் என எங்கள் சங்கம், கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை வலியுறுத்தினோம். தற்போது நிறைவேற்றப்படவுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

