/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மந்தையில் எரியாத மின் விளக்கு அதிகாரிகளை கடிந்த எம்.எல்.ஏ.,
/
மந்தையில் எரியாத மின் விளக்கு அதிகாரிகளை கடிந்த எம்.எல்.ஏ.,
மந்தையில் எரியாத மின் விளக்கு அதிகாரிகளை கடிந்த எம்.எல்.ஏ.,
மந்தையில் எரியாத மின் விளக்கு அதிகாரிகளை கடிந்த எம்.எல்.ஏ.,
ADDED : ஜூலை 19, 2025 02:58 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டி கருப்புசாமி கோயில் மந்தையில் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட 9 மீட்டர் உயர ஹைமாஸ் விளக்கு 6 மாதங்களாக எரியாமல் உள்ளது.
இந்த மந்தையை சுற்றி அரசு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி, கோயில் நாடகமேடை, குடிநீர் தொட்டி, குடியிருப்புகள் உள்ளன. இவ்வழியாக கடைகளுக்கு இரவிலும் ஏராளமான பெண்கள் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் விளக்கு எரியாததால் சில சமூக விரோதிகள் மந்தையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை என புகார் தெரிவித்தனர்.
சுகுமாரன் கூறியதாவது: பி.டி.ஓ.,விடம் புகார் அளித்தால் 'ஹைமாஸ் விளக்குகளை பராமரிக்க கூடாது என்கிறார். அதற்கு பதிலாக எல்.இ.டி., லைட்' அமைத்து தர கோரியும் நடவடிக்கை இல்லை. வெங்கடேசன் எம்.எல்.ஏ.,விடம் நேரில் புகார் செய்தேன். ஊராட்சி செயலர், பி.டி.ஒ., தி.மு.க.,கிளை நிர்வாகியிடம், ஒரு பல்புகூட வாங்கி மாட்ட மாட்டீர்களா என கடிந்தார். 2 நாளில் மாட்ட வில்லை என்றால் நானே பல்பு மாட்டுவேன்' எனக் கூறி சென்றுள்ளார். நாட்கள் கடந்து விட்டதால் எம்.எல்.ஏ.,வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார்.