ADDED : நவ 19, 2026 06:15 PM
மதுரை: மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கல்லாணை இன்று (நவ.,19) கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளித்தார்.
அவர் கூறியதாவது: நீர்வளத்துறை சார்பில் பந்தல்குடி கால்வாயில் வெள்ளத் தடுப்பு பணிகள் நடக்கின்றன. இதில் போதிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை இன்றி மக்கள் பாதிக்கின்றனர். கால்வாய் பாலம் வழியாக சென்ற பள்ளிக் குழந்தைகள் இருவர் கழிவுநீருக்குள் விழுந்தனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்கு காரணம். இக் கால்வாயை கடக்க பயன்படும் பாலங்கள் அருகே கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கட்டுமான பகுதிக்குள் செல்ல இயலாத வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள், பசுமை வண்ண பாதுகாப்பு வலைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கால்வாய் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
