/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கபடி போட்டியில் எம்.எம்.பள்ளி வெற்றி
/
கபடி போட்டியில் எம்.எம்.பள்ளி வெற்றி
ADDED : டிச 02, 2024 04:36 AM

திருநகர் : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையே நடந்த மாநில கபடி போட்டியில் மதுரை திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வள்ளியூரில் பெட் பொறியியல் கல்லுாரியில் 'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டிகளில் 103 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி அணி 36 -- 32 புள்ளிகள் வித்தியாசத்தில் நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், உடல் கல்வி ஆசிரியர்கள் சபாபதி, அப்துல் அஜீஸ், வைரமுத்து பாராட்டினர்.