திருப்பரங்குன்றத்தில் அலைபேசி பாதுகாப்பு கட்டண வசூல் ரத்து
திருப்பரங்குன்றத்தில் அலைபேசி பாதுகாப்பு கட்டண வசூல் ரத்து
ADDED : செப் 09, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் அலைபேசி பாதுகாப்புக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.
செப். 1 முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டமாக வருவதால் ரசீது பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சில்லரை இன்றி ரூ. 20, ரூ.50 கொடுத்தவர்களுக்கு மீதி வழங்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றுமுதல் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. இனி கட்டணம் இன்றி அலைபேசிகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்துச் செல்லலாம். முகத்தை ஸ்கேன் செய்வது, அலைபேசி விவரம் பதிவு செய்தல், ரசீது வழங்கும் நடைமுறை தொடர்கிறது.
