/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மாதிரி ஓட்டுப்பதிவு' பணிகள் துவக்கம்
/
'மாதிரி ஓட்டுப்பதிவு' பணிகள் துவக்கம்
ADDED : ஜன 10, 2026 07:42 AM

மதுரை: மதுரையில் தேர்தல் பணியின் ஒருபகுதியாக மாதிரி ஓட்டுப்பதிவு பணிகள் நேற்று துவங்கின.
மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் காந்திமியூசியம் அருகே கோடவுனில் தயாராக உள்ளன. இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று மாதிரி ஓட்டுப்பதிவு பணிகள் துவங்கின. மொத்தமுள்ள மின்னணு இயந்திரங்களின் எண்ணிக்கையில் 5 சதவீத (225) இயந்திரங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. இதில் ஓட்டுக்களை 'டம்மி'யாக பதிவு செய்து ஆய்வு செய்தனர்.
இப்பணிகளை தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிரவீன்குமார் துவக்கி வைத்தார். நிகழ்வில் மேற்பார்வையாளர் சக்திவேல், நேர்முக உதவியாளர் ரங்கநாதன், தாசில்தார் இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

