ADDED : ஜன 29, 2025 05:22 AM
மதுரை :   மதுரையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண்டல அளவிலான புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டிகள் அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் நேற்று துவங்கியது.
மதுரை டி.இ.ஓ., அசோக்குமார் துவக்கி வைத்தார். பல்கலை டீன் லிங்கதுரை பேசினார். மண்டல அளவில் 25 அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் பல்வேறு தலைப்புகளில் கண்டுபிடிப்புகளுக்கான மாதிரி வடிவம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று (ஜன.29) மாணவர்கள் தயாரித்த சிறந்த மாதிரிகள் வடிவங்கள் கலெக்டர் சங்கீதா முன்னிலையில் தேர்வு செய்யப்படுகின்றன. முதல் சிறந்த மூன்று மாதிரி வடிவங்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். ஆசிரியர்கள், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

