ADDED : ஏப் 07, 2026 10:41 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் சட்டசபை தொகுதியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது புதுமையாக வீடுகளில் டெலிவரி செய்யப்படும் காஸ் சிலிண்டர்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அதேபோல் செக்கானுாரணி வார சந்தையில் பொது மக்களிடம் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்தும், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனேஷ் குமார், சிவக்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
