ADDED : பிப் 22, 2024 06:24 AM
திருநெல்வேலி: தமிழகத்தில் இருநாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி பிப்.27 ல் மதுரை பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி பிப். 27, 28 ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிப். 27 மதியம் 1:20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2:05 மணிக்கு சூலூர் விமான படைத்தளம் வந்தடைகிறார்.
அங்கிருந்து பல்லடம் ஹெலி பேடுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் 2:45 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சியில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின் ஹெலிகாப்டரில் மாலை 5:00 மணிக்கு மதுரைக்கு வருகிறார்.
5:15 மணிக்கு மதுரை டி.வி.எஸ்., லட்சுமி பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பங்கேற்கிறார். பின்னர் மதுரை தாஜ் ஓட்டல் சென்று ஓய்வெடுக்கிறார். அடுத்தநாள் துாத்துக்குடி நிகழ்ச்சிக்கு செல்கிறார்.