/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஜிபே'வில் பணம் அனுப்பு; சிறையில் சலுகை அனுபவி!
/
'ஜிபே'வில் பணம் அனுப்பு; சிறையில் சலுகை அனுபவி!
ADDED : பிப் 16, 2025 02:26 AM
மதுரை: மதுரை சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள், 1,500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கஞ்சா, மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சில காவலர்கள் வாயிலாக 'சப்ளை' ஆகின்றன.
சிறைக்குள் சோதனையின் போது சிக்கும் கஞ்சா, எந்த காவலர் வாயிலாக சப்ளையானது என்பதை கைதிகள் சொல்வதில்லை.
இந்நிலையில், காவலர்கள், அதிகாரிகள் சிலர் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க, அவர்களின் உறவினர்கள் வாயிலாக, 'ஜிபே'வில் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி காவலர் ஒருவர், கைதிக்கு மொபைல் போன் கொடுத்து, உறவினர்களிடம் பேச உதவியதற்கு, 'ஜிபே'வில் 5,000 ரூபாய் பெற்றுள்ளார். அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சிறை அதிகாரிகள், கைதிகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டிய சிறை விஜிலென்ஸ், உளவுப்பிரிவு போலீசார் கண்டும், காணாமலும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலும் மெத்தனமாக உள்ளனர்.
அதே சமயம், கைதிகளை கண்காணிக்கும் சிறை நிர்வாகம், காவலர்களையும் கண்காணித்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

