/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பருவமழை முன்னெச்சரிக்கை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
பருவமழை முன்னெச்சரிக்கை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 09, 2024 06:06 AM
மதுரை : ''வடகிழக்கு பருவமழையில் சிலர் பலி என்பது தி.மு.க., அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தோல்வி என்பதை காட்டுகிறது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையில் தமிழகத்தில் சிலர் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த உயிரிழப்பும் இல்லாமல் எதிர்கொள்வோம் என்று முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். ஆனால் இன்று நிலவரம் கலவரமாக மாறிவிட்டது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தோல்வி என்பதை காட்டுகிறது.
இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளித்தது. அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள் என்று முதல்வர் தெரிவித்தும் துறை வாரியாக இடைவெளி ஏற்பட்டது. துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு குழு அவசியம். ஆனால் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவில்லை. துறை வாரியாக ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். ஆய்வு கூட்டம் மற்றும் அறிக்கையால் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால்தான் காக்க முடியும். இவ்வாறு கூறினார்.