/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பருவ மழை: நாங்களும் 'ரெடி' போலீஸ் கமிஷனர் தகவல்
/
பருவ மழை: நாங்களும் 'ரெடி' போலீஸ் கமிஷனர் தகவல்
ADDED : அக் 16, 2024 04:06 AM
மதுரை: மதுரையில் பருவமழையை எதிர்கொள்ள போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர் என கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் 30 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் துவக்க விழா ஆம்னி பஸ் உரிமையாளர் நல சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார். போலீஸ் கமிஷனர் லோகநாதன், உதவி கமிஷனர் சிவசக்தி பங்கேற்றனர்.
லோகநாதன் கூறியதாவது: இதுபோன்ற கண்காணிப்பு காமிராக்கள் குற்ற செயல்களை தடுக்க, கண்டறிய பயன்படுகின்றன. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 60 கேமராக்கள் உள்ளன. அவை 24 மணிநேரமும் செயல்படுகின்றன. இதேபோல தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பருவ மழையை எதிர்கொள்ள மதுரையில் போலீசாரும் தயாராக உள்ளனர். அவர்களுக்கு தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது என்றார்.