ADDED : ஏப் 20, 2026 11:29 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பல்லவி நகரில், கலைநகர் விரிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம், தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலசிவா, நிர்வாகிகள் பால்பேரின்பநாதன், அன்பழகன், ராமசுப்பிரமணியம் பங்கேற்றனர்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீடுகளில் குப்பை சேகரிக்க வேண்டும். தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளி சாக்கடையில் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
