ADDED : ஆக 27, 2026 02:42 AM

மதுரை: மதுபோதையில் அத்துமீறிய ராஜா, 30, என்பவரை, இரும்பு தடியால் அடித்து கொன்ற அவரது தாய் அய்யம்மாள், 50, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யம்மாள். இவரது மகன் ராஜா.
இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அய்யம்மாளிடம், மதுபோதையில் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யம்மாள், இரும்புத்தடியால் தலையில் அடித்ததில், ராஜா உயிரிழந்தார். அவரது உடலை , வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில், தள்ளி புதைத்தார்.
இந்நிலையில், 22 குற்றவழக்குகள் உள்ள ராஜா, மூன்று மாதங்களாக மாயமானதால், கருப்பாயூரணி போலீசார், வீட்டிற்கு வந்து, ராஜா குறித்து அய்யம்மாளிடம் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக கூறிய அய்யம்மாள், பின், மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார், அய்யம்மாளை கைது செய்தனர்.
