ADDED : ஏப் 26, 2026 11:38 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை பெருங்குடியை சேர்ந்தவர் சிவபெருமாள் 30, சரக்கு வேன் டிரைவர். மனைவி பிரிந்து சென்றதால் தாய் பொற்கொடி உடன் வசித்தார். சிவபெருமாள் தினமும் பணம் கேட்டு குடிபோதையில் தாய் பொற்கொடியை தாக்கியுள்ளார்.
ஆத்திரமடைந்த பொற்கொடி, மகன் துாங்கியபோது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். பெருங்குடி போலீசார் பொற்கொடியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
