UPDATED : ஆக 26, 2026 11:12 PM
ADDED : ஆக 26, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கொட்டக்குடி கிராம மக்களுக்கு மேலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) உமா மகேஸ்வரி கிராமத்தில் ஒட்டியுள்ள போஸ்டரில் தெரிவித்துள்ளதாவது:
ஊராட்சியில் புதுார், பெருங்காலக்குடி, ஆண்டிபட்டி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் வீட்டு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பல பகுதிகளில் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுவதால் பலருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதனால் அனைத்து வீடுகளிலும் ஊராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மோட்டாரை பறிமுதல் செய்வதோடு, குழாய் இணைப்பைத் துண்டிப்பதுடன், தண்ணீர் திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க உள்ளனர். இதில் இருந்து தங்களை பாதுகாக்க மோட்டாரை உடனே அகற்ற வேண்டும் எனத் தெரிவத்துள்ளார்.
