தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தரமான கட்டடங்களுக்கு எம்.எஸ்.எம்., பில்டர்ஸ்

தரமான கட்டடங்களுக்கு எம்.எஸ்.எம்., பில்டர்ஸ்

தரமான கட்டடங்களுக்கு எம்.எஸ்.எம்., பில்டர்ஸ்


UPDATED : அக் 18, 2026 06:32 AM

ADDED : அக் 18, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:32 AM ADDED : அக் 18, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.எஸ்.எம்., பில்டர்ஸ் உசிலம்பட்டியிலும், அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் தரமான கட்டடங்கள் கட்டித்தரும் பணியில் 40 ஆண்டுகளாக நம்பிக்கையான நிறுவனமாக திகழ்கிறது.

இந்நிறுவனத்தினர் கூறியதாவது: உசிலம்பட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் எம்.எஸ்.மாணிக்கம். சிறுவயதில் இருந்தே கட்டடப்பணியில் ஈடுபட்டு, எம்.எஸ்.எம்., பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி 40 ஆண்டுகளாக திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், உசிலம்பட்டியிலும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் கட்டுமானப்பணிகளை நிறைவேற்றி வருகிறார். இப்பகுதிகளில் திருமண மண்டபங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், சிறியது முதல் பெரிய அளவிலான வீடுகள் என பல்வேறு பல கட்டடங்களை உருவாக்கிய வல்லுநராகவும் திகழ்கிறார்.

சமூக ஆர்வலராக உசிலம்பட்டி நகர அரிமா சங்கத்தில் தன்னை இணைத்து கடந்த 25 ஆண்டுகளாக சேவைகளிலும் ஈடுபடுகிறார். சங்கத்தில் பொருளாளர், செயலாளர், தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். உசிலம்பட்டி நகர அரிமா சங்கத்தில் இவர் தலைவராக இருந்த 2016 காலத்தில் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து கடந்த 40 ஆண்டு காலமாக துார் வாராமல் இருந்த உசிலம்பட்டி கண்மாயை முழுமையாக துார்வாரி சாதனை படைத்தவர். உசிலம்பட்டி பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும்பணியிலும் ஈடுபட்டுள்ளார். ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்குகிறார்.இவரது சாதனையை பாராட்டி தென்மேற்கு அமெரிக்கப் பல்கலை, தொழில்முறை கல்விப் பணிக்கான உலகளாவிய மன்றம் இணைந்து, கட்டுமான மேலாண்மைத் துறை, சிறந்த சமூக சேவவயைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இவ்வாறு கூறினர்.

கட்டுமான பணிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ள 94434 30139.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us