தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எம்.எஸ்.எம்.இ., நிறுவன சந்திப்பு

 எம்.எஸ்.எம்.இ., நிறுவன சந்திப்பு

 எம்.எஸ்.எம்.இ., நிறுவன சந்திப்பு


ADDED : நவ 29, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழக அரசின் 'பேம் டி.என்.,' நிறுவனம் சார்பில் மதுரை மடீட்சியாவில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங் களின் (எம்.எஸ்.எம்.இ.,) தயாரிப்புகளை அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய் வதற்கான சந்திப்பு கூட்டம் நடந்தது.

நிறுவன பொதுமேலாளர் வெங்கடேசன் சிறுதொழில் நிறுவனங் களுக்கு அரசு தரும் சேவைகள் குறித்து பேசிய தாவது:

தமிழகத்தில் வாகன உதிரி பாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், விண்வெளி துறைக்கான பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை எம்.எஸ்.எம்.இ., நிறு வனங்கள் உற்பத்தி செய்கின்றன.

மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களில் இப்பொருட்களுக்கான தேவை இருந்தும் விற்பனை செய்வதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே பெரிய தொழில் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., நிறு வனங்களுக்கு இடை யிலான சந்திப்புகளை ஏற்படுத்துகிறோம் என்றார்.

தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங் குளம் அணுமின்நிலையம், துாத்துக்குடி வ.உ.சி., கப்பல் துறைமுகம், துாத்துக்குடி தேசிய அணுமின் நிலையங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்களது நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதிரிபாகங்கள், பதிவு செய்யும் வழிமுறை குறித்து விளக்கினர்.

மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், மடீட்சியா தலைவர் செந்தி குமார், செயலாளர் அசோக் உட்பட பலர் பேசினர். 150 தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us