ADDED : நவ 12, 2024 05:29 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த வார்டுக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனி, சாந்தி டாக்டர் காம்பவுண்ட் தெருவில் 30 வீடுகள் உள்ளன. கடந்தாண்டு தெருவில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. இதற்காக தோண்டிய மண்ணை அகற்றவில்லை. மழை நேரங்களில் தேங்கும் நீரால் தெருவில் நடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன் கூறுகையில், ''இதுகுறித்து செயல் அலுவலர், பேரூராட்சி தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. துாய்மை பணியாளர்கள் ப்ளீச்சிங் பவுடரை துாவி செல்கின்றனர். பேரூராட்சி உதவி இயக்குனர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன். நோய் தொற்று அபாயம் உள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும்'' என்றார்.
