ADDED : அக் 21, 2025 03:47 AM

திருநகர்: திருநகர் ஜோசப் நகர் பகுதியில் அனைத்து ரோடுகளும் சேறும் சகதியமாக இருப்பதால் மக்கள் அவதியுறுகின்றனர்.
இப்பகுதியில் நான்கு தெருக்கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் சரிவர சீரமைக்கப்படவில்லை. ஏற்கனவே மேடு பள்ளங்களாக இருந்தது. சிலநாட்களாக பெய்யும் மழையால் ரோடு சேறும் சகதிகமாக மாறிவிட்டது. நடந்து செல்லக்கூட முடியவில்லை. தீபாவளி நேரத்தில் அப்பகுதி மக்கள் வெளியில் கடைகளுக்கு பொருள்கள் வாங்கக்கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.
ரோடுகள் மோசமாக உள்ளதால் குடிநீர் லாரிகளும் உள்ளே வருவதில்லை. இதனால் குடிநீர் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக தனி தீவில் வசிப்பது போல் உள்ளோம். சீரமைக்க நடவடிக்கை தேவை என்றனர்.
திருநகர் ஜோசப் நகர் 2வது தெரு சேறும் சகதியுமாக உள்ளது.