தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா


UPDATED : மே 01, 2026 04:27 PM

ADDED : மே 01, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 04:27 PM ADDED : மே 01, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.

இதில் திருவிழா பத்திரிகையை வைத்து சாமி கும்பிட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிக்கை (சலாங்கம்) வாசிக்கப்பட்டது. மே 25 ல் திருவாதவூரில் இருந்து திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மேலுாருக்கு எழுந்தருள்வர்.

மே 28 ல் திருக்கல்யாணமும், மே 29 ல் தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us