ADDED : மார் 19, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி முகூர்த்தகால் நடும்விழா நேற்று நடந்தது.
இவ்விழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக நடந்த இந்நிகழ்ச்சியில், கோயில் முன்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப் பட்டது.
கோயிலில் அமாவாசையை முன்னிட்டு பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.
