/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

ADDED : செப் 28, 2024 04:18 AM
மதுரை : மதுரையில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜூ ஆய்வு செய்தார். கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், மின்விளக்கு, ரோடு, கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் முடிக்கப்பட்ட, நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
மதுரைக்கு குடிநீர் வழங்கும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் பதித்தல் பணி, காமராஜர் பாலம் கீழ் (பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு பகுதி) வைகையாற்றின் குறுக்கே இரும்பு குழாய்கள் பதிப்பு பணிகள், அதைத் தொடர்ந்து பண்ணைப்பட்டியில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சத்திகரிப்பு நீரேற்று நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தார்.
தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் கோபு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், செயற்பொறியாளர்கள் சேகர், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.