/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரிதாப நிலையில் பல்நோக்கு மருத்துவமனை
/
பரிதாப நிலையில் பல்நோக்கு மருத்துவமனை
ADDED : ஜன 04, 2025 04:08 AM
மதுரை: மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 2வது 3வது மாடிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று, பெயரளவில் குழாய்கள் மட்டும் இருப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
அவர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் தரைத்தளத்திற்கு இறங்கி வரவேண்டும். சிகிச்சை பெறும் நிலையில் சிரமப்படுகின்றனர். முதல் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது. அங்கும் குடிதண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். நரம்பியல் மூளை சிகிச்சை பெறும் 66 வது வார்டில் 40 படுக்கைகள் உள்ளன.
இவ்வார்டில் மூன்று பொதுக் கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.
இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் என பலரும் பயன்படுத்துவதால், எந்நேரமும் கழிவறையை சுத்தம் செய்து கொண்டே இருக்கும் அவலம் உள்ளதாக பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
நரம்பியல் பிரிவு பெண்கள் கழிப்பறைகளில் தாழ்ப்பாள்கள் இல்லாததால் பயன்படுத்த இயலவில்லை என நோயாளிகள் பரிதவித்தனர். புதிதாக கட்டப்பட்ட இப்பிரிவுகளில்கூட அடிப்படை வசதிகள் இல்லையே என நோயாளிகள் குற்றம்சாட்டினர். மருத்துவமனை முதல்வர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

