ADDED : நவ 18, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : மேலுார் நகராட்சி கமிஷனர் பாரத் தெரிவித்துள்ளதாவது: நகரில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தினசரி கடைகளில் உருவாகும் கழிவுகளை தரம் பிரிக்காமல் பொது வெளிகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் வீசுகின்றனர். அதனால் சுகாதாரகேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே தங்கள் கடைகளில் ஏற்படும் கழிவுகளை மக்கும் குப்பை (பச்சை நிற தொட்டி), மக்காத குப்பை (நீலநிற தொட்டி) என 2 வகை தொட்டி வைத்து நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி சட்ட நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.