நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ஆதவன், பொறியாளர் ரத்தினவேலு கவுன்சிலர்கள் சின்னச்சாமி, ரம்ஜான் பேகம், வீரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களோடு முதல்வர் முகாமில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், திருமங்கலத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.